Monday 19 September 2016

அக்குபங்சர் ஒரு அறிவியல் பூர்வமான மருத்துவமுறை. நம் உடலில் கழிவுகள் தேங்குவதும், அக்குபங்சர் சக்தி நாளங்களில் ஏற்படும் சக்தி ஓட்டத்தடையுமே நோயாகும்.

இப்படி கழிவுகள் தேங்குவதற்கு நம் உடலில் அமைந்துள்ள பன்னிரெண்டு (12) முக்கிய உள்ளூறுப்புகளின் இயக்கக் குறைவே காரணமாக அமைகிறது.

அக்குபங்சர் நோயறிதல் முறைகள் மூலம் பலவீனமடைந்த உள்ளுறுப்பைக் கண்டறிந்து, அவ்வுறுப்பின் சக்தி ஓட்டப்பாதையில் அமைந்துள்ள சரியான அக்குபங்சர் புள்ளியைத் தூண்டுவதன் மூலம் நோய்க்குக் காரணமான கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றி ஆரோக்கியத்திற்குத் திரும்பலாம்.

இரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற டெஸ்டுகளின் அவசியமில்லை.

மருந்துகள், மாத்திரைகள், டானிக் போன்ற இரசாயன்ங்களின் தேவையுமில்லை.

நோயின் ஆரம்ப நிலையானாலும் சரி, நோய் முற்றிய நிலையானாலும் சரி உடலின் இயக்கக் குறைபாட்டை நீக்கிநோயிலிருந்து முழுமையான நிவாரணமளிக்கிறது அக்குபங்சர்.